தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட கனகரத்தினம் ஆதித்யன் என்ற அரசியல் கைதி 14 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
ஆதித்யன், 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் மகனான ஆதித்யன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து கொழும்பு நீதிவான் நீதிமன்றின் நீதிபதியால் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டார்.
எனினும், ஆதித்யன் மேலும் ஒரு வழக்கில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகின்றது.