தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டால் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்ற முடியும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆமோதித்து – அதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற வகையிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் பங்காளிக் கட்சிகளான புளொட் மற்றும் ரெலோவை நோக்கி, நீங்கள் தமிழரசுக் கட்சியை சிதைக்கப் பார்க்கின்றீர்களா என்று கோபத்துடன் சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், “நீங்கள் கூட்டமைப்பின் தலைவர். ஒரு கட்சி சார்பாக நடக்காதீர்கள்” – என்று பதில் வழங்கியுள்ளார்.