0
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் களமிறங்குவதற்கு ஐக்கிய சோசலிசக் கட்சி திட்டமிட்டுள்ளது என்று அதன் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
“யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள சில சபைகளுக்கு எமது கட்சி போட்டியிடும். மக்களும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஓட்டோ’ சின்னத்திலேயே ஐக்கிய சோசலிசக் கட்சி களமிறங்கவுள்ளது.