திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்பு நடத்தும் தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக – தேர்தல் ஏற்பாடுகளை இரத்துச் செய்யுமாறு உத்தரவிடுமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவால் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றத்தில் இன்று, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான எஸ்.துரைராஜா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே உள்ளூராட்சி சபைத் தேர்தல் திட்டமிட்டு நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
மனு மீதான விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறும்.