யாழ்., கொல்லன்கலட்டியில் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த சமயம் 12 பவுண் தாலிக்கொடி திருடப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த போது, பின்கதவை உடைத்து உள்ளே நுழைந்து பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த தாலிக்கொடியைத் திருடிச் சென்றுள்ளனர்.
வீட்டார் திரும்பி வந்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தமையை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது தாலிக்கொடி திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.