யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.
இதன்போது, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருவரும் பேசினர்.
இந்தச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW