யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ். ஆயர் இல்லத்துக்கும் விஜயம் செய்தார்.
அங்கு ஜனாதிபதி, யாழ். ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் ஆயரிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.