செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வல்வை பட்டத்திருவிழா

வல்வை பட்டத்திருவிழா

3 minutes read

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும்   ராட்சத ‘ விசித்திர பட்டத் திருவிழா  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்றது.

அதன் போது, போட்டியாளர்கள் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதை பறக்க விட்டனர்.  

இதில் முதலாம் இடத்தை உருமாறும் மர்ம தாக்குதல் விமானத்தை போன்று பட்டத்தை அமைத்த   ம.ஹாசன் என்பவர் பெற்றுக்கொண்டார். இவருக்கு இரண்டு பவுண் தங்க ஆபரணமும் பரிசாக வழங்கப்பட்டது. இவர் 6 ஆவது தடவையாக முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தை உழவு இயந்திரம் மரநடுகை திட்டத்தை போன்று பட்டத்தை அமைத்த ம. பிரசாந் என்பவர் பெற்றுக்கொண்டார்  

மூன்றாம் இடத்தை மேள தாளங்களுடன் கூடிய ஆகாய விசித்திர போர்கல அரங்கம் போன்று பட்டத்தை அமைத்த நிரோசன் சின்னா என்பவர் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான சிறப்பு பரிசுகளுடன்  பட்டப்போட்டியில் பங்கேற்ற அனைத்து பட்ட உரிமையாளர்களுக்கும் பரிசில் வழங்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More