2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகளவான சுயேச்சைக் குழுக்கள் வடக்கு மாகாணத்தில் போட்டியிட்டிருந்த நிலையில் இம்முறை குறைந்தளவான சுயேச்சைக் குழுக்களே நேற்று வரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
வடக்கின் 5 மாவட்டங்களிலும் 24 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
யாழ். மாவட்டத்தில் 5 அரசியல் கட்சிகளும் 7 சுயேச்சைக்குழுக்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சைக் குழுவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 அரசியல் கட்சிகளும், வவுனியா மாவட்டத்தில் 6 அரசியல் கட்சிகளும், மன்னார் மாவட்டத்தில் 4 அரசியல் கட்சிகளும் 3 சுயேச்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.