தேர்தலுக்கான செலவுகளைக் கட்டுப்படுத்துவது குறித்த சட்டமூலத்தை நாளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றக் குழு அறையில் பிற்பகல் 2.30 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமையவே இந்த அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதியும் பங்கேற்கவுள்ளார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடு ஏற்படும் பட்சத்தில் நாளை குறித்த சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும், அது தொடர்பாக அமுலுக்கு வரும் சட்டங்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தாக்கம் செலுத்தாது என்றும் நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.