0
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உடன்பாடு எட்டப்படாத மாவட்டங்களில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தனித்துப் போட்டியிடவுள்ளது.
இது தொடர்பான பேச்சு ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று தெரிவித்தார்.
எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இறுதித் தீர்மானம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.