புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கடமைகளைப் பொறுப்பேற்றார் யாழ். புதிய அரச அதிபர்!

கடமைகளைப் பொறுப்பேற்றார் யாழ். புதிய அரச அதிபர்!

2 minutes read

யாழ்ப்பாணம் மாவட்ட புதிய அரச அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று காலை 10.20 மணியளவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

யாழ். மாவட்ட அரச அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்றுமுன்தினம் (16) அமைச்சரவை வழங்கியது.

இவருக்கான நியனக் கடிதம் நேற்று (17) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்த்தனவால் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று (18) காலை சர்வமதத் தலைவர்களிடம் ஆசி பெற்ற பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக அவர் பொறுப்பேற்றார்.

இதற்கு முன் இலங்கை நிர்வாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராகக் கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More