புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு!

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு!

1 minutes read

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்குத் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என்று கடவத்தை பொலிஸ் நிலையத்திலும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திலும் இருவேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களான கே.பி.பி. பத்திரன மற்றும் எஸ்.பி. திவாரத்ன ஆகியோர் ஆணைக்குழுவில் இருந்து விலகாவிட்டால் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More