யாழ்ப்பாணம், கோப்பாய் மத்தி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் துரத்தித் துரத்தி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என அழைக்கப்படுவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
முகமூடிகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே குடும்பஸ்தரைத் துரத்திச் சென்று வாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.