“இலங்கையின் நிலைமை மே – ஜூன் மாதமளவில்தான் ஓரளவு சரிவரும் என்று நம்புகிறேன்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமை பற்றி கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உண்மையில் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். அதற்குக் காரணம் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பிழையான பொருளாதார முறைமைதான்.
எதிர்வரும் ஏப்ரல் புதுவருடம் மக்களுக்குச் கஷ்டமாகவே இருக்கும். மே – ஜூன் மாதமளவில்தான் நிலைமை ஓரளவு சரிவரும் என்று நம்புகின்றேன்.
இருந்தாலும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியைப் பாரமேற்கும்போது இருந்த நிலைமையை விட நல்ல நிலைமை இப்போது உள்ளது” – என்றார்.