செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இடமாற்றங்கள் இரத்து! – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

இடமாற்றங்கள் இரத்து! – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

1 minutes read

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச சேவையில் இடமாற்றங்கள் செய்யப்பட முடியாது எனத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் இடமாற்றங்கள் செய்யப்பட வேண்டுமாயின் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்து அன் அனுமதியுடன் மட்டுமே இடமாற்றம் செய்ய முடியும்.

தேர்தல் தொடர்பில் சகல சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தேர்தல் முடியும் வரையில் இந்தச் சட்ட ஏற்பாடுகள் பின்பற்றப்படும்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More