தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகியுள்ள நிலையில், மாவட்ட வெட்டுப்புள்ளியை பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
அதன்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 143 ஆகும்.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 142 ஆகும்.
அதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், கேகாலை, கண்டி, மாத்தளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 144 ஆகும்.
நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, புத்தளம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 142 ஆகும்.
அநுராதபுரம், மொனராகலை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 141 ஆகும்.
அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளி 140 ஆகும்.