தாயும் இரண்டு பிள்ளைகளும் தீ பரவலில் பரிதாபச் சாவு!
வீடொன்றில் ஏற்பட்ட தீ பரவலில் தாயும், இரண்டு பிள்ளைகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றிரவு இவர்கள் உறங்கிக் கொண்டிருந்த அறையில் இவ்வாறு தீ பரவல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் ஐந்து வயது சிறுவனும், பத்து வயது சிறுமியம், 30 வயதுடைய தாயுமே உயிரிழந்துள்ளனர்.
பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றச் சென்ற 37 வயதுடைய கணவர், தீக்காயங்களுடன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அருகில் உள்ள வீடொன்றிலிருந்து குறித்த வீட்டுக்கு மின்சாரம் பெறப்பட்டுள்ளது என்றும், தீ பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.