நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த மத ஸ்தலங்களின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரை அப்புறப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பௌத்த மத ஸ்தலங்களின் பாதுகாப்பையும் இருப்பையும் உறுதிப்படுத்துவது அரசின் கடமை என ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
“பாதுகாப்புப் படையினர் போரின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மதத் தலங்களைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் அளப்பரிய பங்களிப்பைச் செய்து வருகின்றனர். அவர்கள், பௌத்த பிக்குகளுக்கும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
எனவே, அந்த இடங்களில் இருந்து பாதுகாப்புப் படையினரை அகற்றுவது அந்த இடங்களின் வளர்ச்சிக்கு இடையூறாக அமையும்” – என்று மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.