தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வைத்தியர்களின் ஆலோசனையின் பிரகாரம், மருத்துவக் கண்காணிப்புக்காகக் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
“வழமையான பரிசோதனைக்காகவே ஐயா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்” – என்று சம்பந்தனின் குடும்பத்தினர் நேற்றிரவு ‘காலைக்கதிர்’ பத்திரிகையிடம் தெரிவித்தனர்.