வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்துகொண்ட வாகனம் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அம்பாறை, தம்பட்டைப் பகுதியிலேயே வாகனம் மீது கல் வீச்சு தாக்குதல் நடப்பட்டுள்ளது. அதில் வாகனத்தின் கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளது.
பேரணியில் கலந்துகொள்வோரை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் செயற்பட்டு வரும் நிலையில், அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தொடர் அச்சுறுத்தல்களைத் தாண்டியும் பேரணி மட்டக்களப்பை அண்மித்துள்ளது.