வடக்கு அரசியல் தலைவர்கள் கடும்போக்கைக் கைவிட்டு நடுநிலையுடன் செயற்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.
“பௌத்த தேரர்களைப் பகைத்துக்கொண்டு இலங்கையில் எதையும் செய்ய முடியாது. சிங்கள பௌத்த சக்திகளும், பிக்குகளும் எதிர்க்கும் விடயத்தை நிறைவேற்றவும் முடியாது. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்ட விடயத்துக்கும் இது பொருந்தும்” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், தான் ஜனாதிபதியாக இருந்த போது வடக்கில் 95 சதவீத காணிகளை விடுவித்ததாகத் தெரிவித்த மைத்திரிபால, மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.