யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை மாலை இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வை ரெலோ, புளொட் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் புறக்கணிக்கவுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நாளை மாலை இடம்பெறவுள்ளன. இதில் கலந்துகொள்ளுமாறு வடக்கைச் சேர்ந்த அனைத்து தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இதில் ரெலோ, புளொட் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பனவற்றின் நிலைப்பாடு இதுவரை தெரியவரவில்லை.