மட்டக்களப்பு – காத்தான்குடியில் தாக்குதலுக்கு இலக்காகி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் நேற்று உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு நீதிவானிடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்கபட்டுள்ளது என்று காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவனின் தாயின் இரண்டாவது கணவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.
தாக்குதலை மேற்கொண்ட 26 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தளையைச் சேர்ந்த இளைஞரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.