“ஐக்கிய மக்கள் சக்தியில் ஆட்சியில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை.
எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும். சரத் பொன்சேகா இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டு குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
அதுமட்டுமல்ல, போதைப்பொருள் வியாபாரிகள், ஊழல்வாதிகள் எல்லோருக்கும் தண்டனை வழங்கப்படும். சஜித் பிரேமதாஸ சொல்வதைச் செய்பவர். அவர் நிச்சயம் இதைச் செய்வார். அவர் ஏற்கனவே இந்த வாக்குறுதியை மக்களுக்கு வழங்கியுள்ளார்” – என்றார்.