வாகன விபத்தில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டுகஸ்தோட்டை – ஜம்புகஹபிட்டிய வீதியில் தந்தையும் மகளும் நடந்து சென்று கொண்டிருந்த வேளை வான் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய குடும்பஸ்தரும். அவரது 14 வயது மகளும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.