0
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாகத் தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பகுதியில் வசித்து வந்த எம்.ஜி.பிரேமதாஸ (வயது 71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தலவாக்கலை ஹொலிரூட் பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தலவாக்கலைப் பொலிஸார் மேலும் கூறினர்.