யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் அறிவிக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த வரவு – செலவுத் திட்டம் சபையில் பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? ஆர்னோல்ட் மீண்டும் தோற்கடிக்கப்படுவாரா? என்கின்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.