எம்பிலிப்பிட்டிய – இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த குறித்த இளைஞர் உயிர் தப்ப வெளியே பாய்ந்த போது பஸ் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 17 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.