உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பைத் திட்டமிட்டவாறு எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தபால் வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தாமதமடைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தபால் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்று (15) முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், நிதி கிடைக்காமை காரணமாக தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிப்பதில் தடைகள் ஏற்பட்டன என்று அரச அச்சகம் தெரிவித்தது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரச அச்சகம் என்பன கலந்துரையாடலில் ஈடுபட்டன.
அதன்படி, எதிர்வரும் சில நாட்களுக்குள் திட்டமிடப்பட்டபடி தபால் வாக்குச்சீட்டுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.