“பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்று பழ. நெடுமாறன் கருத்து வெளியிட்டமை தொடர்பில் வினவிய போதே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா? என்பது சரியாகச் தெரியாது. அவர் வெளியில் வரும் வரைக்கும் உண்மை தெரியாது.
ஆனால், பிரபாகரன் எங்களுடைய மனதில் இருக்கின்றார் என நான் முன்னரும் கூறி இருக்கின்றேன். எந்தவொரு விடுதலை வீரனும் மக்களினுடைய மனதில் நிறைந்திருக்கின்றார். அதேபோன்றுதான் சுபாஷ் சந்திரபோஸ் இருக்கின்றார்.
எனவே விடுதலை வீர்ர்கள் மீள வருவார்களோ, இல்லையோ என்பதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” – என்றார்.