நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சமஷ்டியை வலியுறுத்துபவர்கள், இலண்டனுக்குச் சென்று அதனைக் கோரலாம் எனச் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
“எங்களை இலண்டனுக்கு போகச் சொன்னால், அவரை நாங்கள் போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும். பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல தமிழ்ப் பெயரும் அல்ல, எனவே, அவரை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும்” – என்றும் விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.