அரசின் வரிக்கொள்கை மற்றும் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக தொழிற்சங்கங்கள் மாபெரும் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
இதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதி தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோலியம், துறைமுகம், நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரம் ஆகிய தொழிற்சங்கங்களே இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளன.
மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம், வங்கிகளின் தொழிற்சங்க சம்மேளனங்கள் இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்துக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.