புத்தளம் நகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் நகர சபை வீடமைப்புத் திட்டத்தைச் சேர்ந்த 54 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்படும் போது இவரிடமிருந்து 3 கிராம் 260 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மூன்று சந்தர்ப்பங்களில் ஹெரோயின் சம்பந்தமான மூன்று வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்றும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.