“பிரபாகரன் என்றொரு தலைவர் இருந்தார் என்பதும் உண்மை. அவர் மறைந்தார் என்பதும் உண்மை.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார் என்று தமிழ்த் தேசிய பேரியகத்தின் தலைவர் பழ.நெடுமாறன் அண்மையில் தெரிவித்தமை தொடர்பில் பத்திரிகை ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பிரபாகரன் குறித்த ஓர் இனத்தின் அதாவது தமிழினத்தின் உரிமைக்காகப் பயங்கரவாத வழியில் போராடியதால் அவருக்கு எதிராக இலங்கை அரசும் அதன் படைகளும் போரிட்டன. இதைவிட மேலதிக கருத்து எதனையும் தெரிவிக்க விரும்பவில்லை” – என்றார்.