செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஏழு நாள்களில் 51 பேர் கொலை! – இலங்கையில் பயங்கரம்

ஏழு நாள்களில் 51 பேர் கொலை! – இலங்கையில் பயங்கரம்

1 minutes read

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குள் மக்கள் சிக்கியுள்ள இக்கட்டான நிலைமையில் படுகொலைச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.

நாட்டில் கடந்த 7 நாட்களில் (12 – 18) மாத்திரம் 51 படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மாகாணப் பொலிஸாரின் உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட 7 நாட்களில் 3 சிறுவர்கள், 8 பெண்கள் உள்ளிட்ட 51 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குடும்பத் தகராறு, தனிப்பட்ட தகராறு, காதல் விவகாரம், போதைப்பொருள் விற்பனைப் போட்டி மற்றும் கோஷ்டி மோதல்களால் மேற்படி படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அதற்கமைய வடமேல் மாகாணத்தில் 7 நாட்களில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் 9 பேரும், தென் மாகாணத்தில் 7 பேரும், மத்திய மாகாணத்தில் 3 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 2 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, வட மத்திய மாகாணத்தில் 6 பேரும், ஊவா மாகாணத்தில் 5 பேரும், கிழக்கு மாகாணத்தில் 4 பேரும், வடக்கு மாகாணத்தில் 3 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More