சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் பலியாகினர். அத்துடன் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நோர்ட்ன் பிரிட்ஜ் பகுதியில் குறித்த பஸ் இன்றிரவு (19) வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகிபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் வட்டவலை மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான பஸ்ஸில் பயணித்தவர்கள் கொழும்பின் புறநகர் மஹரகமவில் இருந்து சிவனொளிபாதமலைக்குச் சென்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது.