பாலி மற்றும் பௌத்த பல்கலைகழகத்தை தகுதிவாய்ந்த அதிகார சபையாக நியமித்து அதனை சர்வதேச பௌத்த கற்கை மையமாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
பிரிவேனா கல்வியின் தரத்தை உயர்த்துவது இன்றியமையாதது என மகாசங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட யோசனை நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டில் பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை அரச தலையீட்டுடன் நடத்துமாறு மல்வத்து அஸ்கிரி மகாசங்க உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
பௌத்த பிக்குமார் மற்றும் விகாரைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு சாத்தியமான அனைத்து தீர்வுகளும் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.