திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேங்காய் பறிப்பதற்காகச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தென்னை மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தப் பரிதாப சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கோபாலபுரம் – நிலாவெளி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பி என்றழைக்கப்படும் சௌந்தரராஜன் நிரோஸ் குமார் (வயது 41) என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் புல்மோட்டை தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
புல்மோட்டை பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.