0
ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி மீது நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
மருதானை ‘டெக்னிகல்’ சந்தியில் வைத்தே, பொலிஸாரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.