செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தலை மார்ச் 9 இல் நடத்த முடியாது! – ஆணைக்குழு அறிவிப்பு

தேர்தலை மார்ச் 9 இல் நடத்த முடியாது! – ஆணைக்குழு அறிவிப்பு

1 minutes read

பல்வேறு காரணங்களால் திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

நகர்த்தல் பத்திரம் ஒன்றினூடாக தேர்தல் ஆணைக்குழு இதனை உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

தவிர்க்க முடியாத பல தடைகள் காரணமாக மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று குறித்த நகர்த்தல் பத்திரத்தில் தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது கடினம் என திறைசேரியின் செயலாளர் ஏற்கனவே ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

410.6 மில்லியன் ரூபா நிதி வழங்கப்படும் வரை வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க முடியாது என்று அரச அச்சகர் அறிவித்துள்ளார் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

தேர்தல் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பாதுகாப்பைப் பெற்றுக்கொடுப்பதற்குப் பொலிஸ் மா அதிபர் தவறியுள்ளார் என்றும், அதற்காக செலுத்த வேண்டிய கட்டணம் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதன் நகர்த்தல் பத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலுக்குத் தேவையான வாகன எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவதற்குப் பொறுப்பான அரச நிறுவனங்களுக்கு அறிவித்துள்ள போதிலும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு இதன்போது தெரிவித்துள்ளது.

திறைசேரியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், அரச அச்சகம், பொலிஸ் மா அதிபர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் தேர்தலுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுக்கவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆவண ஆதாரங்களுடன் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More