பாம்பு தீண்டி சிகிச்சை பெற்றுவந்த நபரொருவர் இன்று (20) மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த நபர் தனது காணியில் கடந்த வியாழக்கிழமை (16) வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு தீண்டி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்த நபர் ஓட்டமாவடி – சூடுபத்தின சேனையில் வசித்து வந்த 61 வயதுடைய சேகு இஸ்மாயில் முகம்மது உசனார் என்பவராவார்.