இந்தியாவின் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தனை அவரது வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடலில் இலங்கை – இந்தியா உறவுகளை வலுப்படுத்தி எதிர்காலத்தில் ஆற்ற ஆற்ற வேண்டிய பணிகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.