அரசு சாரா உயர்கல்லி நிறுவனங்களில் பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக வழங்கப்படுகின்ற வட்டியல்லா கடன்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைத் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கடந்த 2022.08.22 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய அரசு சாரா உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியல்லா கடன்திட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு செல்வது பற்றி இலங்கை வங்கி, திறைசேரி, மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய, இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் குறித்த தரப்பினர்கள் உடன்பாடுகளுக்கமைய அப்பாடநெறிகளைப் பூர்த்தி செய்த பின்னர் பாடநெறிக்கான கட்டணத்தை எட்டு வருடங்களில் தவணை அடிப்படையில் மீளச் செலுத்துவதற்கும், பாடநெறியைப் பூர்த்தி செய்த பின்னர் தொடர்ந்து வரும் ஆண்டில் நிலவுகின்ற சராசரி நிறையேற்றப்பட்ட முன்னுரிமை கடன் வழங்கல் வீதம் 1 வீதம் சேர்க்கப்பட்டு மாதாந்த வட்டி வீதத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வட்டி வீதத்தைச் செலுத்துவதற்கு இயலுமாகும் வகையில் குறித்த தரப்பினர்களுக்கிடையே தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திருத்தம் செய்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.