பொலிஸார் மீது கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள முயன்ற நபர், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கட்டுநாயக்க – மடவல பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
குறித்த நபர் பொலிஸார் மீது கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்தார். அவ்வேளை அவர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.