அரச நிதி பற்றிய குழுவின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க அப்பதவியிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு அவர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அரச நிதி பற்றிய குழுவின் தலைமை ப்பதவிக்கு கலாநிதி ஹர்டி டி சில்வாவின் பெயரை, ஐக்கிய மக்கள் சக்தி பரிந்துரை செய்திருந்தது.
எனினும், ஆளுங்கட்சியின் ஆதரவுடன் அப்பதவிக்கு மயந்த திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிரணிகள் கடும் விசனத்தை வெளியிட்டிருந்தன.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் மயந்த திஸாநாயக்கவுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புகள் வலுத்தன .
இந்நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இது தொடர்பில் சபாநாயகருக்கும் மயந்த திஸாநாயக்க தெரியப்படுத்தவுள்ளார்.
குறித்த பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னதாக மயந்த திஸாநாயக்க எதிர்ப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.