0
“தேர்தலை வலியுறுத்திக் கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலுக்கான தனது கண்டனத்தைத் தனது சமூக வலைத்தளங்களிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதிவிட்டுள்ளார்.