செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 13 ஐ முற்றாக எதிர்க்கின்றது ஜே.வி.பி.

13 ஐ முற்றாக எதிர்க்கின்றது ஜே.வி.பி.

1 minutes read

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றோம் என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“மாகாண சபை அறிமுகப்படுத்தும்போது அரசமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் உள்ளது. இப்போது 13 உம்
நடைமுறையில் இல்லை; மாகாண சபையும் நடைமுறையில் இல்லை.

தெற்கு மக்கள் ஏற்றுக்கொள்ளாத அரசியல் தீர்வு எங்களுக்கு வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். அப்படியென்றால் தெற்கு மக்கள் 13 ஐ ஏற்கவில்லை. எமது நிலைப்பாடும் சம்பந்தனின் நிலைப்பாடும் ஒன்றுதான்.

அதுமட்டுமல்ல, தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய – எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எமது அரசால் மாத்திரமே முன்வைக்க முடியும். நாம் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More