உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் காரணமாக தனக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, அவ்வழக்கிலிருந்து விடுதலை செய்ய கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 108 பேரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று கொழும்பு மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வா முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்து, தமது கட்சிக்காரர் தற்போது ஜனாதிபதியாக இருப்பதால், அரசமைப்பின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது எனத் தெரிவித்தனர்.
இதனைக் கருத்தில்கொண்ட நீதிபதி, ஜனாதிபதி ரணிலை குறித்த வழக்கின் பிரதிவாதி பட்டியலிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.