களுத்துறை மாவட்டம், பாணந்துறை – பிங்வத்த பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வர்த்தகர் தொடர்பில் 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் வர்த்தகரின் மனைவியும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தவிர, கடவத்தை – கிரில்லவல பகுதியிலுள்ள குறித்த வர்த்தகருக்குச் சொந்தமான மதுபான விற்பனை நிலையத்தில் பணியாற்றிய அவரது சகோதரன் மற்றும் மனைவியின் சகோதரன் ஆகியோரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி பிங்வத்த பகுதியில் நிர்மாணிக்கப்படும் இரண்டு மாடி குடியிருப்பைப் பார்வையிடுவதற்காக சொகுசு ரக வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.